கோயில் யானை குளிப்பதற்காக பிரம்மாண்ட ஷவர்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் குளிப்பதற்காக 3 லட்சம் ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட சவர் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினசரி நடைபெறும் பூஜைகளில் இடம் பெறுவதற்காக ஆண்டாள் என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானை ஓய்வெடுப்பதற்காக கோவில் வளாகத்திலேயே தனி கொட்டகை உள்ளது. 41 வயதாகும் இந்த யானை காவிரி மற்றும் கொள்ளிடத்தில் மட்டுமே குளிக்க வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் யானை ஆண்டாள் குளிப்பதற்காக உள் ஆண்டாள் சன்னதி அருகே நன்கொடையாளர் உதவியுடன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமான மழை தூரல் போன்று ஷவர் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் யானை ஆண்டாள் உற்சாகத்துடன் மழையில் நனைந்து குளித்துவிட்டு வருகிறது. பிரமாண்ட ஷவருக்கு தண்ணீர் தருவதற்காக 96 அடி ஆழத்திற்கு புதிதாக ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.






