அமெரிக்காவில் 144 கோடி ரூபாயில் வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் 144 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாப் பாடகருமான நிக் ஜோனசும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து கணவருடன் பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடியேறினார். லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் புதிய வீடு வாங்க வேண்டும் என விருப்பம் கொண்டனர் பிரியங்கா சோப்ரா தம்பதியினர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே நவீன வசதி கொண்ட புதிய வீட்டை வலைவீசி தேடினர்.
இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் என்சினோ பகுதியில் நவீன வசதிகள் கொண்ட சொகுசு வீட்டை பிரியங்கா தம்பதியினர் வாங்கியுள்ளனர். பல வசதிகள் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு 20 மில்லியன் டாலராகும்.
அதாவது இந்திய மதிப்பில் 144 கோடி ரூபாய். 20,000 சதுர அடி கொண்ட இந்த பிரம்மாண்ட சொகுசு வீட்டில் ஏழு படுக்கையறைகள், 11 குளியலறைகள், கேமராக்கள் கண்காணிக்கப்படும் கதவுகள் ஆகியவை நவீன வசதிகள் உள்ளன.
இதுமட்டுமில்லாமல் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட உடற்பயிற்சி அறை, நவீன ஹோட்டல்களில் இருப்பது போன்ற மதுபான அறை, கூடைப்பந்து ஆடுகளம், பாதாள வாகன நிறுத்தம் என இன்னும் பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. 144 கோடி ரூபாய்க்கு சொகுசு வீடு வாங்கியதன் மூலம் தங்கள் கனவை நனவாக்கி இருக்கின்றனர் நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ரா தம்பதியினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




