மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய காவல் ஆய்வாளர்!

கஜா புயல் பாதிப்பில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண்ணை காவல் ஆய்வாளர் ஒருவர் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தை சேர்ந்த சாவித்ரி என்பவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

கணவரை இழந்த சாவித்ரி சொந்தமாக டீக்கடை ஒன்றை நடத்தியுள்ளார். இந்நிலையில் கஜா புயலில் அவரது டீக்கடை மற்றும் குடிசை வீடு சின்னாபின்னமானது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றத் தொடங்கியுள்ளார் சாவித்திரி. வடகாடு காவல் நிலையத்தில் ஆய்வாளர் பரத் சீனிவாசன் அவரை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

 

மேலும் மாவட்ட மனநல அலுவலகத்தை தொடர்பு கொண்டு சாவித்திரி நிலையை எடுத்துக் கூறி காப்பகத்தில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளார். தற்போது அன்னவாசலில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் சாவித்திரி சிகிச்சை பெற்று வருகிறார்.


Leave a Reply