இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட அதிமுக., வினரிடம் இன்று விருப்ப மனு
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக., சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு கொடுத்தனர்.தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக., சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுவை உரிய கட்டணத்துடன்
நவ.15, 16ல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட தலைநகர்களில் தலைமை அறிவித்துள்ள நிர்வாகிகளிடம் வழங்கலாம என அதிமுக., ஒருங்கிணைப்பாளரும் , துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் – தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் அறிவித்தனர்.
இதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பிகளில் போட்டியிட விரும்பும் அதிமுக., வினர் சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் நாடாளுமன்ற அ.அன்வர் ராஜா, மகளிரணி இணை செயலர் கீர்த்திகா முனியசாமி, மருத்துவ அணி துணை செயலர் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோரிடம் ஏராளமானோர் இன்று விருப்ப மனு அளித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




