--- --:--:-- --

இன்று இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

3

மன்னார் வளைகுடா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

அதாவது திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், தேனி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.

அதன் படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நள்ளிரவு முதலே தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. இதனால், தொடர் கனமழையால் பள்ளி வளாகங்களில் நீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக திருச்செந்தூர் வட்டத்திற்குள் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon