--- --:--:-- --

தவெக கல்வி விருது விழா – முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது!

2

முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தலைமையில் தவெக கல்வி விருது விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.தவெக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சிறப்பு மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தொகுதி வாரியாக கல்வி விருது, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான முதல்கட்ட கல்வி விருது நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி சென்னையில் நடந்தது.

 

தற்போது 2ஆம் கட்டமாக கல்வி விருது நிகழ்ச்சி இன்றும், நாளையும் சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கவுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

 

 

இவர்களுக்கு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய், கல்வி விருது மற்றும் உதவித்தொகை வழங்கி சிறப்பிக்கவுள்ளார். விழாவுக்கு வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு பிரத்யேக நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. விழா அரங்கிற்குள் கைப்பேசி, காகிதங்கள், பேனா உள்ளிட்ட எந்தவொரு பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon