வாக்காளர் சிறப்புத் திருத்த முகாம்: இன்றும், நாளையும் நடைபெறுகிறது
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான முகாம் இன்றும் (நவம்பர் 21), நாளையும் (நவம்பர் 22) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது.
கடந்த நவம்பர் 12-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இந்தச் சிறப்புத் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ள சூழலில், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




