--- --:--:-- --

சிறுபான்மையினர் அமைதி காக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி

9

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாபர் மசூதி தீர்ப்பு தொடங்கி, திருப்பரங்குன்றம் தர்கா தொடர்பான தீர்ப்பு வரை அனைத்துமே சட்டத்தின் அடிப்படையில் தரப்பட்டதா? அரசியல் அழுத்தங்களின் அடிப்படையில் தரப்பட்டதா? என்ற விவாதங்கள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

 

 

தமிழ்நாடு என்பது ஒற்றுமைக்கு முன் உதாரணமாக திகழும் பூமி. இங்கு கோயில்களைக் கட்ட முஸ்லிம்களும்; பள்ளிவாசலை கட்ட இந்துக்களும்; நிலம் கொடுப்பதும், ஒருவருக்கொருவர் உதவி கொள்வதும் தொன்று தொட்டு வரும் இயல்பு. இப்போது அதனை உடைக்க சிலர் முயல்கிறார்கள். அதற்கு தமிழ்நாடு பலியாகி விடக்கூடாது என்று கவலைப்படுகிறோம்.

 

பரபரப்பான இச்சூழலில் முஸ்லிம்கள் இவ்விஷயத்தில் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது என்பதை நினைவூட்டுகிறோம். உங்களுடன் பெரும்பான்மை இந்து சமுதாய மக்களின் அன்பும், அக்கறையும், அனுசரிப்பும் கலந்து இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon