இன்றும் தங்கம் விலை அதிரடி சரிவு…!
நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கம் விலை தொடர் சரிவைக் கண்டு வருகிறது. கடந்த 16 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 15,360 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.அந்த வகையில் மீண்டும் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்து அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றனர்.
நேற்றைய (நவம்பர் 20) நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.470 குறைந்து ஒரு கிராம் ரூ.11,510 க்கும், சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ஒரு சவரன் ரூ.92,080 க்கும் விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து இன்று (நவம்பர் 21) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.11,465 க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.91,720 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.9,330க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.74,640 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.175 க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




