அரசு அதிகாரிகள் மீது ஏன் இதுவரை எஃப்.ஐ.ஆர். போடவில்லை? நீதிமன்றம் சரமாரி கேள்வி
பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது இதுவரை ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால் காவல்துறை வேகமாகச் செயல்படுவதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என வினவியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு, இது தொடர்பாகத் திங்கட்கிழமை விரிவான பதில்மனு தாக்கல் செய்யப்படும் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (நவம்பர் 23) நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




