நகைக்கடை கொள்ளை: நகைகளைப் பதுக்கிய இடங்களை நடித்துக் காட்டிய நிஷாந்த்
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான யூடியூபர் நிஷாந்தை போலீஸ் காவலில் எடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற அனுமதியுடன் ஒருநாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட நிஷாந்தை, சம்பவம் நடந்த இடங்கள் மற்றும் நகைகள் பதுக்கி வைக்கப்பட்ட பகுதிகளுக்குப் போலீசார் நேரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின்போது, நகைக்கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்தது எப்படி, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை எங்கெங்கு கொண்டு சென்றார் மற்றும் மாடக்குளம், விளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் எங்கெல்லாம் மறைத்து வைத்தார் என்பதை நிஷாந்த் போலீசாரிடம் செயல்முறை விளக்கமாக நடித்துக் காட்டினார். இதன் அடிப்படையில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





