திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: பெ.சண்முகம்
சிபிஎம் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ”திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனு செய்ய வேண்டும். இந்த ஆண்டு தீபம் ஏற்றலாம் என்பது எந்த வகையிலும் சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பு அல்ல. இடைக்காலத் தீர்ப்பு என்று கூறிவிட்டு, தீபம் ஏற்றப்படாத இடத்தில் இந்த ஆண்டு மட்டும் ஏற்றலாம் என்பது நியாயமற்றது.
சட்டம் ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது: மத்தியப்படையை பயன்படுத்தலாம் என்பது அச்சுறுத்தல் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உடனே மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




