அக்வான் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு வருமா?
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புதிய புயலால் தமிழ்நாடுக்கு பெரிய தாக்கம் இருக்காது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய ஆய்வு மைய இயக்குநர், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கான வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.
சூறைக்காற்று வீசும் என்பதால் நவம்பர் 18ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




