--- --:--:-- --

இன்று நள்ளிரவு கரையை கடக்கும் முரசு புயல்..!

2

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் நிலவும் முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திரா பிரதேசத்தின் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளத

 

 

அதேபோல் நாளை, நீலகிரி மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனவும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon