--- --:--:-- --

சீரமைக்கப்படும் குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை

10

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்தன.

 

 

குறிப்பாக, பார்லியார் சாலையில் மண் சரிவுகள், பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து சாலை மூடப்பட்டதால் அப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி கடந்த சனிக்கிழமை மாலை முதல் அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன.

 

 

 

தற்போது மாவட்டத்தில் மீண்டும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், கனமழையால் பாதிக்கப்பட்ட குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

 

 

இந்நிலையில், பர்லியார், கோழிக்கறை, புதுக்காடு மற்றும் காட்டேரி போன்ற பல்வேறு கிராமங்கள் இந்தச் சாலையைச் சார்ந்து அமைந்துள்ளதால், மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையை ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon