முதல்வர் விஜய் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்!
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நாளை (அக்.29) காலை 10.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, அரசு நலத்திட்டங்களின் செயல்பாடு, துறைகளின் பணிகள் மற்றும் ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்குத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள மீனவர்களின் எதிர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




