--- --:--:-- --

ஜெம் வீரமணி வழக்கு

images - 2026-10-13T113917.037

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் வீரமணி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த போக்சோ வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வரும் நிலையில் முன்னாள் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ. அருண் மற்றும் கூடுதல் ஆணையர் என். கண்ணன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, திங்கள்கிழமை அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

 

 

 

வீரமணிக்கு எதிரான புகார் கிடைத்த பிறகு இவ்விரு அதிகாரிகளும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து 80-க்​கும் மேற்​பட்ட கேள்வி​கள் கேட்​கப்​பட்​டு, இரு​வரிட​மும் எழுத்​துப்​பூர்​வ​மாக பதில்​கள் பெறப்​பட்​டுள்​ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணை சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

 

 

 

வீரமணிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து 2024 நவம்பரிலேயே சென்னை மாநகரக் காவல் துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து முன்​னாள் சென்னை காவல் ஆணையர் அருண், தென் சென்னை கூடு​தல் காவல் ஆணை​ய​ராக இருந்த கண்​ணன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

 

 

 

ஜெம் வீரமணி விவகாரத்தில் காவல் துறை இறுதியாக 2025 அக்டோபரில் தான் வழக்கு பதிவு செய்தது. இருப்பினும், 2026 பிப்ரவரியில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைப்பதாகக் கூறி காவல் துறை அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் வீரமணி உட்பட 3 பேரை காவல் துறை கைது செய்தது.

 

 

 

இதற்கிடையில், ஜெம் வீரமணி மீது சிறப்பு புலனாய்வு குழு மேலும் ஒரு புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் தொழிலதிபர் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon