--- --:--:-- --

மின்வாரிய பிரச்னையில் தொழிற் சங்கங்கள் கூட்டு போராட்டம் அறிவிப்பு

download - 2026-10-13T112013.484

ஸ்மார்ட் மீட்டர் திட்டம், பொது-தனியார் பங்களிப்பு அடிப்படையிலான மின் உற்பத்தி மற்றும் விநியோகத் திட்டங்கள், மற்றும் குறிப்பிட்ட கால வரம்பு கொண்ட ஒப்பந்த வேலைவாய்ப்பு முறை ஆகியவற்றை எதிர்த்து வரலாற்றில் முதல் முறையாக தி.மு.க- அ.தி.மு.க தொழிற் சங்கங்கள் போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர்.

 

 

ஸ்மார்ட் மீட்டர் திட்டம், பொது-தனியார் பங்களிப்பு (PPP) அடிப்படையிலான மின் உற்பத்தி மற்றும் விநியோகத் திட்டங்கள், மற்றும் குறிப்பிட்ட கால வரம்பு கொண்ட ஒப்பந்த வேலைவாய்ப்பு முறை ஆகியவற்றை எதிர்த்து தமிழக மின்வாரிய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் குதித்துள்ளன. ஆளும் திமுகவின் தொமுச (LPF), அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சிஐடியு (CITU) உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு’ இந்த கூட்டுப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

 

அரசு கொண்டு வரவுள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. எனவே, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், மின் உற்பத்தி மற்றும் விநியோகத் திட்டங்களைத் தனியார் மயமாக்காமல் அரசுத் துறையின் கீழேயே தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் அவை வலியுறுத்துகின்றன.

 

 

 

 

 

 

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 13 அன்று மாலை 5.20 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகம் முன்பாக சென்னை மண்டல தொழிற்சங்கங்கள் தனியாகப் போராட்டம் நடத்துகின்றன. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 15 அன்று அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மேலும், அக்டோபர் 26 முதல் 31 வரை பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

 

 

மின்வாரிய ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதிய பணிக்கொடை (Gratuity) மற்றும் குடும்ப நல நிதி சலுகைகளை வழங்க வேண்டும் என்பதும் தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதன்படி, பணிக்கொடை உச்சவரம்பை 2024 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் வகையில் ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும், குடும்ப நல நிதியை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தும் முடிவை 2021 செப்டம்பர் 1 முதலே முன்வாசல் தேதியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

 

 

இதனுடன், காலியாக உள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஐந்து ஆண்டு கால ஒப்பந்த வேலைவாய்ப்பு முறையைக் கைவிட வேண்டும் மற்றும் 2022 ஏப்ரல் 12 நாளிட் மின்வாரிய உத்தரவு எண் 2-ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர 2-க்குள் அர பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அதன்பின்னர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon