மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு; சுயேச்சை வேட்பாளர் வெளியேற்றம்
மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் மூர்த்தி வெளியேற்றப்பட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது கோளாறு ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் விவிபேட் (VVPAT) ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் எனக் கோரி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சுயேச்சை வேட்பாளர் மூர்த்தி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவத்தால் மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




