--- --:--:-- --

நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு!

4

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு இந்த வருடம் சென்னை போரூர் அருகில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய காணொளி தற்போது வெளியாகி உள்ளது.

 

இந்த கூட்டத்தில் நடிகர் சிவகார்த்தியேன் பேசியதாவது, “இந்த அமைப்பு என்பது நம்மால் முடிந்த உதவிகள் அனைவருக்கும் செய்வதுதான் நோக்கமே தவிர யாருக்கும் போட்டியாகவோ அல்லது யாரையும் எதிர்க்கவோ இந்த அமைப்பு இல்லை என்பதில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் தான் மிகப்பெரிய விஷயம் என்பதை உணர்த்தி அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். பிறகு நன்றாக சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்து முதலில் உங்களது குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

நான் சினிமாவுக்கு வந்து ஒரு சில படங்கள் நடித்துக்கொண்டிருந்தபோது ஒரு சில ரசிகர்கள் என்னை பார்க்க வந்திருந்தனர். அப்போது அவர்களை நான் பார்த்து வரும்போது அந்த நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் வந்திருந்தார். அவர் என்னிடம் “என்ன சிவா யார் இவர்கள் என்று கேட்டார்.” அதற்கு நான் “இவர்கள் என்னுடைய ரசிகர்கள் சார்” என கூறினேன். அதற்கு அவர் “ஓ உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா?” என கேட்டார். அதற்கு நான் “ஆமா சார் எனது ரசிகர்கள் தான்” என கூறினேன். அதற்கு அவர் என்னிடம், “சிவா இதெல்லாம் ஆரம்பத்தில் இருக்க கிரேஸ்.

 

கொஞ்ச நாளைக்கு வருவாங்க” என கூறினார். அதற்கு நான் “இல்ல சார் அவங்க என்னோட தொடர்ந்து வருவாங்க சார்” என கூறினேன். அதற்கு அவர் மீண்டும் “சிவா உங்களுக்கு புரியல. அனுபவம் இல்ல. இதெல்லாம் கொஞ்சம் காலத்துக்குதான் வருவாங்க. நீங்க வேலைய பாருங்க” என சொன்னார். அதற்கு நான் உறுதியா “இல்ல சார் இவங்க அப்படி தெரியல. நிச்சயமா கூட வருவாங்க” என சொன்னேன்.

 

 

நான் ரெண்டு முறை அவரிடம் கூறியது அவர் என்ன நினைத்தார் என தெரியவில்லை. உடனே அவர், “அவங்க வருவாங்க சரி.. அவங்க இருப்பாங்க சரி.. நீங்க இருப்பீங்களா இன்டஸ்ட்ரீல.. பாத்துக்கோங்க” என சொன்னார். 2026 சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தோட நிர்வாகிகள் சந்திப்பு இப்போது நடக்கிறது.

 

நற்பணி என்ற பெயரில் ஓரிரு நாள் மட்டும் செய்து முடித்து விடாமல் நாள்தோறும் நற்பணி செய்வோம் என்ற பெயரில் வருடம் 365 நாளும் குறைந்தபட்சம் 10 நபர்களுக்கு நற்பணி செய்து வருவதை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். முக்கியமாக ஒரு நாளில் குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆவது புத்தகம் படியுங்கள். தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படமும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து கொண்டிருக்கிறேன். இரண்டு படங்களும் ஜனராஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக படமாக இருக்கும்.” என்று பேசினார்.

 

பிறகு அந்நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது அங்கிருந்து முதல் புத்தகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கலந்துரையாடலை முடித்துவிட்டு அங்கு இருந்த நிர்வாகிகள் அனைவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் உணவு அருந்திவிட்டு மகிழ்ச்சியாக சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon