--- --:--:-- --

சுட்டமல்லே பாடலை ஆபாசமாகச் சித்தரித்தவர்கள் மீது வழக்கு

7

’சுட்டமல்லே’ பாடலில் நடித்த நடிகை ஜான்வி கபூரின் உருவத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாகச் சித்தரித்துப் பரப்பிய நபர்கள் மீது ஹைதராபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான ‘தேவரா’ திரைப்படம், கடந்த 2024ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தில் ஜான்வி கபூர் நடித்த ‘சுட்டமல்லே’ பாடலின் காட்சிகளைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாக உருமாற்றி சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர்.

 

 

இது தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் தளத்தில், பெண்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிக்கும் இந்த ஏஐ மார்பிங் கலாச்சாரம் மிகவும் கவலையளிப்பதாகப் பதிவிட்டுள்ளார். இத்தகைய வீடியோக்களை உருவாக்குபவர்கள் மட்டுமின்றி, அவற்றை வேண்டுமென்றே பரப்புபவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிரஞ்சீவி வலியுறுத்தியுள்ளார்.

 

 

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த ஏஐ போலி வீடியோ தொடர்பாக ஹைதராபாத் சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதை உருவாக்கியவர்கள் மற்றும் அதைப் பகிர்ந்தவர்களைத் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon