ஜெம் வீரமணி வழக்கில் ஸ்டாலின், ரகுபதியை விசாரிக்க வேண்டும்!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 29-ம் தேதி கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டார். அவர் மீது இதுவரை நான்கு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீரமணியை கைது செய்த போலீசார் அவரை அதி தீவிர பாதுகாப்பு பிரிவில் வைத்துள்ளனர்.
உலகளவில் சுமார் 22 நாடுகளில் தனது கார்ப்பரேட் வர்த்தக கிளையை பரப்பி உள்ள ஒரு கிரானைட் அதிபரின் உலகம், இப்போது சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள 10X15 அடி சிறை அறை, ஒரு கட்டில், ஒரு நாற்காலி, ஒரு ஆங்கில செய்தித் தாள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ள நடைபாதையிலான குறுகிய நடைப்பயிற்சி என சுருங்கிப் போய்விட்டது.
மற்ற கைதிகளுடன் அரிதாகவே உரையாடும் வீரமணி சிறை ஊழியர்களுடன் பேசுவதும் குறைவு. சிறைக்குள் வீரமணி தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனிமையில் தான் நீண்ட நேரம் இருக்கிறாராம். அவரது மகள், வக்கீல்கள் சிலர் மட்டுமே அவரை சந்தித்துள்ளனர். வீரமணி வழக்கில் தி.மு.க-விற்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஜெம் வீரமணி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் ரகுபதியை விசாரிக்க கோரி த.வெ.க சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் த.வெ.க வழக்கறிஞர் அணியினர், புகார் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





