--- --:--:-- --

ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனம்..!

4

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனம் தொடர்பாக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தனிநபர்களோ, இடைத்தரகர்களோ தொடர்பு கொண்டால், அவற்றை நம்ப வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

அந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: “ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனம் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதி அடிப்படையில் நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள், செவிலியர் பணி தேர்வு மற்றும் பணி நியமனத்திற்காக எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

மேலும், பணம் அல்லது ஏதேனும் ஆதாயத்தைப் பெற்றுக்கொண்டு, நியமன செயல்முறையில் தலையீடு செய்ய முடியும் எனக் கூறும் தனிநபர்கள் அல்லது இடைத்தரகர்களை நம்பவோ, அவர்களுடன் தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் தங்களது கவனத்திற்கு வந்தால், பின்வரும் தொடர்பு வழியாக உடனடியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

புகார்கள் / குறைகள் இருந்தால் 8754448477 என்ற எண்ணிலும், dph.nursesrecruitment.grievance@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைவருக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான நியமன செயல்முறை நடைபெறுவதற்கு தங்களது ஒத்துழைப்பு தேவை” எனக் கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon