--- --:--:-- --

மேகதாது வரைவு திட்ட அறிக்கை போலியானது : பி.ஆர் பாண்டியன்

தமிழகம் புதுச்சேரி ஒப்புதல் பெறாத மேகதாது விரிவான வரைவு திட்ட அறிக்கை போலியானது. அதனை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமார் நேற்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீலை சந்தித்து மேகதாது அணை கட்டுமானத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

 

வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் பெறாமலும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, வனத்துறை அனுமதி பெறாமலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் பெறாமலும் விரிவான வரைவுத்திட்ட அறிக்கை என்கிற பெயரில் மத்திய அரசிடம் கர்நாடகா தாக்கல் செய்துள்ளது போலியானது.

 

 

இதனை மத்திய அரசு எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது. மேகதாது அணை கட்டினால் கர்நாடக விவசாயம் அழிந்து போகும். கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில், ஆயிரம் மீட்டர் ஆழத்தில் அடர்ந்த வனப்பகுதியில் மேகதாது அணை கட்டுவதால் கர்நாடகாவிற்கு எந்த பயனும் இருக்காது.

 

 

43 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை மட்டுமே கர்நாடக விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தி வருகின்றோம். பற்றாக்குறை காலத்தில் கிருஷ்ணராஜ சாகரில் தண்ணீர் தேக்குவதை கைவிட்டு பெங்களூர் நகரத்திற்கு குடிநீர் என்கிற பெயரில் மேகதாட்டுவிற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். இதனால் கர்நாடக விவசாயம் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, ராசி மணலில் தமிழகம் அணை கட்டிக் கொள்ள கர்நாடகா அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அன்றைய முதலமைச்சர் சிதராமையாவிடம் எடுத்துரைத்துள்ளனர்.

 

 

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு உள்ளது. இதன் அடிப்படையில் கர்நாடகம் கீழ் பாசன உரிமை பெற்ற தமிழகம் புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் புதிய அணையோ, நீர் தேக்கமோ கட்ட இயலாது என்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாகும். சட்ட விரோதமாக மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும்.

 

 

நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 25 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யும் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும். தமிழகத்தின் உணவு உற்பத்தி அழியும். உணவு பஞ்சம் ஏற்படும். விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் அகதிகளாக வெளியேறக்கூடிய பேராபத்து ஏற்படும். எனவே, சட்டவிரோதமாக ரூபாய் 16,745 கோடி மதிப்பீட்டில் போலியான வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய நீர் வள ஆணையத்திடம் வழங்கி அனுமதி கேட்பதை மத்திய அரசு சட்டவிரோதமென அறிவிப்பு வெளியிட்டு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டு உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon