--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை..!

3

நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் நாளை மறுநாள் வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.  தென்மேற்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னார் வளைகுடா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் எனக் கணித்துள்ளது.

 

 

சென்னையை பொறுத்தவரையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon