அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தங்க தமிழ் மகன் விருது
அமெரிக்காவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது. அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவருக்கு சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான நடைபெற்ற பாராட்டு விழாவின்போது சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு வீட்டுவசதி துறை செயலர் கிருஷ்ணன், உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் விஜய் பிரபாகர் உட்பட தமிழ் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




