டாஸ்மாக் பிரச்சனை 200 படிகள் கொண்டது : அமைச்சர் விக்னேஷ்
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூர் அருகே தமிழக வெற்றிக் கழகம் மேற்கு மகளிரணி சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “புனிதமான தமிழ் மண்ணில் பிறக்கும் குழந்தைகள், தளபதி ஆட்சியில் வரம் வாங்கி கொண்டு பிறக்கும் குழந்தைகள் இவர்கள். டாஸ்மாக் ஊழியர்கள் முன் அறிவிப்பின்றி கடைகளை அடைத்தவர்கள் மீண்டும் கடைகளை திறக்க ஆரம்பித்து விட்டார்கள். பணிக்கு வராதவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்போம், பழி வாங்கும் நோக்கம் ஏதும் இல்லை. தப்பு யார் செய்தாலும் தப்பு தான். அரசு தப்பு செய்தாலும், அமைச்சர் தப்பு செய்தாலும் அதற்கான தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
இன்றைய டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமானவர்கள் திமுக – அதிமுக தான். அன்று இவர்கள் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுத்து இருந்தால் இவ்வளவு தூரம் வந்து இருக்காது. இது ஒரு உதாரணம் தான். இந்த மாதிரி அனைத்து துறைகளும் உள்ளது. டாஸ்மாக் பிரச்சனை என்பது 200 படிகள் கொண்டது, ஆனால் நான் 70 படிகள் வரை ஏறிவிட்டேன். மீதமுள்ள படிகளை ஏறி விரைந்து நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




