கூடுவாஞ்சேரியில் பிரியாணி அண்டாவில் மனிதக்கறி சமைத்த சம்பவம் தொடர்பாக சூட்கேஸில் உள்ள உடல் பாகங்களை அனுப்பக்கோரி தமிழக காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. அதேபோல், ஆக்ராவில் கைப்பற்றிய பாகங்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்பட உள்ள நிலையில், அசாமில் கைது செய்யப்பட்ட தம்பதியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.