--- --:--:-- --

அரசு பேருந்தை மறித்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர்

10

கடலூரில் அரசு பேருந்தை மறித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மீது படுத்துக்கொண்டு டிக்டாக்வீடியோ பதிவு செய்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த அஜீத்குமார் கடந்த சில நாட்களாக பல்வேறு வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டு வந்தார்.

 

சிறுவன் முன்னிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு கொள்வதை போலவும் பச்சிளம் குழந்தையை பாயில் படுக்க வைத்து அதன் மேல் கயிற்றில் தொங்கியபடி அஜித்குமார் டிக் டாக் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அரசு பேருந்தை வழிமறித்து அதற்கு முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மேல் படுத்து கொண்டபடி என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலுக்கு இந்த வீடியோவை வெளியிட்டார்.

 

இந்த வீடியோ வழக்கம்போல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து கடலூர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி அஜித் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon