--- --:--:-- --

ராகுல் காந்தியே முதல்வர் விஜய்யை பிரதமராக அமரவைப்பார் – எம்எல்ஏ கனிமொழி

02

2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் குறித்து தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் கணிப்பு வெளியிட்டுள்ளார். மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வரும் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடியது. சட்டப்பேரவைக்கு வந்த கவுண்டம்பாளையம் தவெக கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

 

அப்போது பேசிய கனிமொழி, “2029-ல் பிரதமர் வேட்பாளர் தலைவர் தளபதி தான். 2025-ல் நான் கணித்தது போல 2026-ல் விஜய் முதலமைச்சர் ஆனார். இப்போது 2026-ல் சொல்கிறேன்… 2029-ல் தமிழகத்திலிருந்து தான் பிரதமர் உருவாகப் போகிறார். 2029 இந்திய அரசியலில் மாற்றம் நிகழப் போகிறது. பிரதமரை டெல்லியில் இருந்து முடிவு செய்ய போவது இல்லை. ராகுல் காந்தி தான் விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார்.

 

 

அதுபோல ராகுல் காந்தியே அடுத்து முதலமைச்சர் விஜய்யை பிரதமராக அமரவைப்பார். இந்தியா அளவில் 2029 நாடாளுமன்ற தேர்தல் ஒரு மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும். 2029 ஆம் ஆண்டு விஜய் தான் பிரதமர்” என்று பேசினார். அதே சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட், “அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல் காந்தி தான். முதலமைச்சர் விஜய், ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என முன்நிறுத்துவார். இப்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர்கள் மன நிலையில் இருக்கிறார்கள்.

 

 

அவர்கள் தலைவரை தான் அவர்கள் சொல்வார்கள். 2029-ம் ஆண்டு ராகுல் காந்தி தான் பிரதமர். இதனால் எந்த சோர்வும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு கிடையாது. ராகுல் காந்தி அவர்கள் தான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல இந்தியாவே தெளிவாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon