--- --:--:-- --

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: ஆகஸ்ட் 26 வரை ரயில் சேவைகளில் மாற்றம்

10

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 

இதன்படி, எழும்பூர் – தஞ்சாவூர் இடையே இயங்கும் உழவன் விரைவு ரயில் மற்றும் எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில் ஆகியவை இன்று முதல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. உழவன் விரைவு ரயில் இரவு 11.00 மணிக்கும், மங்களூரு எக்ஸ்பிரஸ் இரவு 11.40 மணிக்கும் தாம்பரத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon