சிவகங்கை நம்பர் 1 மாவட்டமாகும்: MLA குழந்தை ராணி நாச்சியார்
சிவகங்கை மாவட்டத்தில் எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும், உள்ளூர் கைவினைத் தொழிலுக்கு போதிய திட்டங்கள் ஒதுக்கப்படவில்லை என்றும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி நாச்சியார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் எவ்வித வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. இங்குள்ள கிராஃப்ட் (கைவினை) தொழிலுக்கு எந்தவித நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.
இத்தொழிலை சரியான முறையில் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தியிருந்தால், இன்று தொழில் வளர்ச்சியில் சிவகங்கை மாவட்டம் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கும். வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும். எங்களுக்கு அந்த ஒரு தொழில் மட்டுமே போதுமானது என சிவகங்கை எம்.எல்.ஏ குழந்தை ராணி நாச்சியார் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




