டெல்லி செங்கோட்டையில் 13 ஆவது முறையாக கொடியேற்றினார் பிரதமர் மோடி
நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தொடர்ந்து 13 ஆவது தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் 80-ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குப் பிரதமர் மோடி தலைமை வகித்தார்.
நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செங்கோட்டையில் தொடர்ந்து 13 ஆவது முறையாக கொடியேற்ற வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றார்.
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவதற்கு முன் ‘வந்தே மாதரம்’ பாடல் முழுமையாக இசைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 13 ஆவது முறையாக செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




