ஒரு வாரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்பு – வானிலை மையம்
மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய தமிழக பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை வரும் 16-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




