தமிழக பட்ஜெட்டில் முதல் முறையாக ‘மண்ணின் மகள்’ திட்டம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க அரசு 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில், நிதியமைச்சர் மரிய வில்சன், காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட் தமிழக வெற்றிக் கழக அரசின் முக்கிய மைல்கல்லாகும்.
கடந்த ஒரு மாத காலமாகவே முதலமைச்சர் விஜய் இந்த பட்ஜெட் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், முதல் முறையாக தமிழக பட்ஜெட்டில் ’மண்ணின் மகள்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடம் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை லேண்ட் ஓனர்ஸுகளாக மாற்றும் நோக்கத்துடன் ’மண்ணின் மகள்’ திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விவசாயம் செய்யும் திட்டங்களுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும். திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் இந்த திட்டத்திற்கு ரூ.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





