--- --:--:-- --

சாதிய பாகுபாடு பார்ப்பதாக ட்விட்டர் நிறுவனம் மீது குற்றச்சாட்டு

Social Media on Portable Devices

A Twitter logo is seen on a computer screen on November 20, 2017. (Photo by Jaap Arriens/NurPhoto via Getty Images)

ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,கேன்சல் ஆள் ப்ளு டிக் இன் இந்தியா என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

 

பத்திரிகையாளரும், சமூக செயல்பாட்டாளருமான திலீப் மாண்டல் ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றம்சாட்டி வெரிஃபை எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மைனாரிட்டி என்ற ஹேஸ்டேக்கை தொடங்கினர்.

 

அதனைத் தொடர்ந்து பழங்குடியினத்தைசேர்ந்த செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா 26 ஆயிரத்துக்கும் அதிகமான பயனாளர்கள் பின்தொடர்ந்தும் தன்னுடைய டுவிட்டர் கணக்கு சரிபார்க்கப்பட்டு நீல நிற டிக் வழங்கப்படவில்லை என்றும் அதில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

 

பயனாளர்களின் கணக்கை சரி பார்க்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த டுவிட்டர் நிறுவன செய்தி தொடர்பாளர் தொடர்ந்து இயங்கி வரும் ஒவ்வொருவரின் கணக்குகளையும் முறையாக சரிபார்க்கப்பட்டு வந்ததாக கூறினார். ஆனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை தவிர மற்றவர்களின் கணக்குகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டு ப்ளூ டிக் வழங்கப்படுகிறது என செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா குற்றம் சாட்டியிருக்கிறார்.

 

பிரபலங்களின் பெயரில் பல பொய்யான கணக்குகள் தொடங்கப்படும் என்ற காரணத்தினால் பேஸ்புக் ,டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் உண்மையான கணக்கை சரி பார்த்து ப்ளூ டிக் வழங்குகின்றன. இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

8 லட்சத்து 15,000 பேர் பின்தொடரும் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் ட்விட்டர் கணக்கும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon