ஆசிரியரின் காதலனின் செக்ஸ் ஆசை! அதற்கு இரையாகிய மாணவிகள்!
காவல்துறையால் அதிரடியாக ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டிருக்கிறார். காதலன் தன்னுடன் நெருக்கமாக நெருங்கி பழக வேண்டுமென்பதற்காக அந்த காதலனனின் கொடூர ஆசையை அந்த காதலி நிறைவேற்றியுள்ளார்.
சென்னை தி நகரில் சஞ்சனா என்பவர் டியூஷன் சென்டர் நடத்தி வந்துள்ளார். பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் சஞ்சனாவிடம் டுயூஷன் பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில்தான் சஞ்சனாவிடம் டியூஷன் படித்து வந்த மாணவியின் தந்தை சென்னை காவல் ஆணையரிடம் அதிர்ச்சிகரமான புகார் ஒன்றை கொடுக்க பரபரப்பு ஏற்பட்டது.
டுயூஷன் சென்டருக்கு எதிர் வீட்டில் வசிக்கும் பாலாஜி என்ற இளைஞர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்க சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில்தான் அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தன.
டியூஷன் சென்டர் நடத்தி வரும் சஞ்சனாவும், எதிர் வீட்டில் வசித்து வரும் பாலாஜியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே சில பிரச்சினைகள் ஏற்பட்டதோடு பாலாஜியும் சஞ்சனாவிடம் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார்.
அப்போது சஞ்சனா உனக்கு நான் என்ன பரிசு தந்தால் என்னுடன் நெருங்கிப் பழகுவாய் என்று கேட்க அதற்கு பாலாஜி சொன்ன பதில்தான் விபரீதத்தில் முடிந்துள்ளது. டியூஷன் படிக்கும் மாணவிகளை தன்னுடன் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்தால் தான் தொடர்ந்து உன்னை காதலிப்பேன் என்று பாலாஜி கூற சஞ்சனாவும் கொடூர மனதுடன் அந்த காரியத்தை செய்வதற்கு துணிந்துள்ளார்.
தன்னுடன் டுயூஷன் படித்த மாணவி ஒருவரை ஈசிஆரில் உள்ள சொகுசு விடுதிக்கு சஞ்சனா அழைத்து சென்றுள்ளார். கல்வி விஷயமாக தன்னை ஆசிரியை சஞ்சனா அழைத்து செல்கிறார் என்று நம்பி மாணவியும் அவருடன் சென்றுள்ளார். இதன்பிறகு சொகுசு விடுதியில் காத்திருந்த பாலாஜி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதனை ஆபாச படமாகவும் எடுத்த பாலாஜி அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் சஞ்சனாவிடம் டியூஷன் படிக்க வந்த வேறுசில மாணவிகளையும் சஞ்சனாவின் ஏற்பாட்டின்படி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. உத்தியோகம் கிடைக்காத பாலாஜி அந்த படங்களை காட்டியே மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.
இதன் பிறகுதான் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஒருவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க பாலாஜியையும், அவரது காதலி டியூஷன் டீச்சருமான சஞ்சனாவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருவரின் மீதும் போக்சோ உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததோடு அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
காதலன் தன்னுடன் நெருங்கி பழக வேண்டும் என்பதற்காக டியூஷன் டீச்சர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






