--- --:--:-- --

மாணவர்களுக்கு உதவ ‘உதவி அலுவலர்களை’ நியமித்தது தமிழக அரசு

5

மிழகத்தில் உள்ள பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்குக் கல்விக்கடன் கிடைக்க ஏதுவாக, அனைத்து மாவட்டங்களிலும் ‘உதவி அலுவலர்களை’ (Facilitation Officers) நியமித்து கல்லூரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உதவி பேராசிரியர் அந்தஸ்தில் உள்ள இந்த உதவி அலுவலர்கள், மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதற்கான வழிமுறைகளை வழிகாட்டுவதோடு, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள். கடன் தேவைப்படும் மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்களிடம் (District Lead Bank Manager) ஒப்படைக்கும் முக்கியப் பணியை இவர்கள் மேற்கொள்வர். இதன் மூலம், மாணவர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே ஒரு பாலமாக இவர்கள் செயல்படுவார்கள்.

 

 

ஏற்கனவே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை கவனித்து வரும் மாவட்ட ஆட்சியரக நோடல் அலுவலர்களுடன் (Nodal Officers) இணைந்து இந்த உதவி அலுவலர்கள் பணியாற்றுவார்கள்.கல்விக்கடன்கள் எந்தவிதத் தாமதமும், அலைச்சலும் இன்றி விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்ய, அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உதவி அலுவலர்கள் மற்றும் நோடல் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுக் கூட்டங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டங்களில் நிலுவையில் உள்ள கடன் விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற உயர் கல்வித்துறையின் ஆய்வுக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், “பணப் பற்றாக்குறை காரணமாக எந்தவொரு மாணவரும் தனது உயர் கல்வியை பாதியில் நிறுத்திவிடக் கூடாது. மாணவர்களுக்குப் பிணையின்றி (Collateral-free) கல்விக்கடன் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon