நக்சலைட்டுகளுடன் கடும் சண்டை – சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம்
சத்தீஸ்கர் மாநிலத்தில், இன்று அதிகாலை நக்சலைட்டுகளுடன் ஏற்பட்ட மோதலில், சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டத்தில், தன்குடா-பமீட் பகுதியில் உள்ள நக்சலைட்டுகளை தேடும் பணியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் நடைபெற்ற தேடுதல் பணியின் போது, மறைந்திருந்த நக்சலைட்டுகள் சிலர், பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நீடித்தது. இதில், மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், நக்சலைட்டுகள் சிலர் உயிரிழந்ததாக, தகவல்கள் கூறுகின்றன. இதை தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.






