“திருவள்ளுவர் மீது சாயம் பூசுவது தேவையில்லாத செயல்”:கமல்ஹாசன்
திருவள்ளுவர் எல்லா மதத்திற்கும் சொந்தமானவர் என்றும் அவருக்கு சாயம் பூசுவது தேவையில்லாத செயல் என்றும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கலை, நடிப்பு தனது தொழில் என்றும், அரசியல் தனது கடமை என்றும் கூறினார்.
எல்லா மதத்தினரும் அவர்களுக்கு திருவள்ளுவர் சொந்தம் என்று கொண்டாடுவது இது முதல்முறை அல்ல என்று தெரிவித்த கமல்ஹாசன் திருவள்ளுவர் கிறிஸ்துவரா என்றுதானே பேச்சுப்போட்டியில் பேசியிருப்பதாக கூறினர்.
திருவள்ளுவர் எல்லோருக்கும் பொதுவானவர் என தெரிவித்த கமலஹாசன் திருவள்ளுவரை தங்களுடையவராக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் விரும்புவதை உணர முடிவதாக கூறினார்.






