--- --:--:-- --

எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை – செழியன் மறைவுக்கு பேரரசு உருக்கம்

9

ளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் மறைவுக்கு திரைப்பட இயக்குநர் பேரரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “செழியன் என் உயிர்த் தோழன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் நான் சென்னை கிளம்பியபோது, என்னை ரயிலில் ஏற்றிவிட்டு வழியனுப்பிய நண்பர் அவர்தான்.

 

 

இன்று அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. இந்த இழப்பு தமிழ் திரையுலகிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். செழியனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon