--- --:--:-- --

தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்..!

3

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான ரயில் பாதையில் இன்று அவசர கால தண்டவாளப் பராமரிப்பு மற்றும் மின்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ‘காலை 10:30 மணி முதல் மதியம் 3:30 மணி வரை’ ஐந்து மணி நேரத்திற்கு இயக்கப்பட வேண்டிய 41 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

 

ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தங்களின் அவசரப் பயணங்களை 10:30 மணிக்கு முன்பாகவே முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆயிரக்கணக்கான பயணிகள் காலை 10 மணிக்கு முன்பாகவே தாம்பரம் ரயில் நிலையத்தில் திரண்டனர்.

 

 

ஒரே நேரத்தில் வழக்கத்திற்கு மாறாகப் பெருந்திரளான மக்கள் கூடியதால், டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் நடைமேடைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் தாம்பரம் ரயில் நிலையம் கடுமையான நெரிசலுடன் பரபரப்பாகக் காணப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon