--- --:--:-- --

இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள்..!

01

ரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இதில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாள் தேர்வு நெல்லை, கோவை, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 222 மையங்களில் நடைபெற்றது.

 

மாநிலம் முழுவதும் காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. தேர்வை 61 ஆயிரத்து 386 பேர் எழுதினர். மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது. 613 மையங்களில் நடைபெற உள்ள இத்தேர்வை 1 லட்சத்து 67 ஆயிரத்து 743 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon