ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..!
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அரசின் பரிந்துரையின்பேரில், 2026 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தொடரில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்கள், ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக 2026 ஜூலை 20 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என்று அவர் கூறினார்.





