2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய நிர்வாக அனுமதி வழங்கி, முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் விலையில்லா வேட்டி, சேலை திட்டம் இந்த ஆட்சியிலும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.