--- --:--:-- --

கூட்டுறவு, உணவு துறை ஆய்வுக் கூட்டம் : செயல் திட்டங்களை கேட்டறிந்த விஜய்

4

விவசாயிகளின் பிரதான உபதொழிலான கால்நடை வளர்ப்பு, தற்போது நடப்பாண்டில் பருவமழை பொய்த்ததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. புற்கள் கருகிவிட்ட நிலையில், மாடுகளின் முதன்மைத் தீவனங்களான தவிடு, பருத்திக் கொட்டை, புண்ணாக்கு மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றின் விலை மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை உயர்ந்துள்ளது.

 

பராமரிப்பு மற்றும் தீவனச் செலவு அதிகரித்துள்ள நிலையில், மாடுகளுக்கான போதிய உணவு கிடைக்காததால் பால் உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது. நெல்லை விவசாயிகள் இதுகுறித்துப் பேசும்போது, “முன்பு 8 லிட்டர் கறந்த மாடுகள், தற்போது 3 முதல் 4 லிட்டர் பால் மட்டுமே கறக்கின்றன. மேலும் மாடுகள் உண்ணித் தொல்லை மற்றும் இரத்த சோகையாலும் பாதிக்கப்படுகின்றன” என்று வேதனை தெரிவித்தனர்.

 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் நாள்தோறும் 7,000 லிட்டர் பால் உற்பத்தி குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கால்நடை வளர்ப்பை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon