மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!
ஜூன் மாதம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளான இன்று அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று மட்டுமே காலை மாலை என 2 வேளையுமே தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டது. காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.13,030க்கும், சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து மாலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,200க்கும் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.105,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,100க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.10,940க்கும் சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.87,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





