--- --:--:-- --

இந்த பதிவு இப்போது தேவையா? நெட்டிசன்கள் கமெண்ட் – குஷ்பூ பதிலடி

9

டிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகா, தனது நீண்டநாள் காதலரான ஷ்ரவன் சீனிவாசனை கோவாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பெரிய அளவிலான ஆடம்பர ஏற்பாடுகள் இல்லாமல் குடும்ப உறவுகளின் பங்கேற்புடன் எளிமையாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

 

 

 

இந்நிகழ்ச்சியில், மறைந்த இயக்குனர் கே.பாக்யராஜ், த்ரிஷா, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், நாகார்ஜுனா மற்றும் அவரது மனைவி அமலா, நடன இயக்குனர் பிருந்தா, ரவி மோகன் மனைவி ஆர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நேரில் மணமக்களை வாழ்த்தினர். குஷ்பு மகள் திருமணத்தின் அடுத்த நாளான சனிக்கிழமை இயக்குனர் கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

 

 

இவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக வலைதளம் மூலம் இரங்கல் தெரிவித்தனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் இரங்கல் பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நடிகை குஷ்பு தனது மகள் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

 

 

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், பாக்யராஜ் மறைவால் தமிழகமே துக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் இந்த புகைப்படங்கள் தேவையா? என்று கேள்வி எழுப்பினர். இதனால் கோபமடைந்த குஷ்பு, “எனது மகள் திருமணம் முடிந்து 48 மணிநேரம் தான் ஆகிறது. எனக்கு மகிழ்ச்சியாக இருக்க முழு உரிமை உண்டு. பாக்யராஜின் மனைவி பூர்ணிமாவை உங்களுக்குத் தெரியுமா? இல்லை எனக்கு தெரியுமா? உங்களுக்கு என் பதிவுகள் பிடிக்கவில்லை என்றால், என்னை பின்தொடர்வதை நிறுத்திவிடுங்கள். உங்களை போன்றவர்கள் இல்லாமலேயே நான் சிறப்பாக இருப்பேன்” என்று பதிலளித்துள்ளார்.

 

 

பாக்யராஜின் மறைவு வருத்தமளிப்பது என்றாலும் குஷ்புவின் வீட்டில் திருமணம் நடந்துள்ளது. அந்த நிகழ்வு அவர்களை பொறுத்தவரை சந்தோஷமான நிகழ்வு தான். அதை கொண்டாட குஷ்புவிற்கு முழு உரிமை உள்ளது என்று நெட்டிசன்கள் பலர் குஷ்புவிற்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon