--- --:--:-- --

அயோத்தி காணிக்கையில் ரூ.7 கோடி வரை கையாடல்..!

3

யோத்தி ராமர் கோயில் பக்தர்களின் காணிக்கையில் 7 கோடி ரூபாய் வரை கையாடல் விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் அளித்த காணிக்கை மற்றும் நகைகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

 

 

அப்போது, உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களே பல கோடி ரூபாய் வரை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.காணிக்கை எண்ணப்படும் அறையில் ஊழியர்களுக்குத் தெரியாமல் சிசிடிவி கேமராக்களை வைத்து சிறப்பு விசாரணைக் குழு வேவு பார்த்ததில், ஊழியர்கள் சிலர் பணக்கட்டுகளை ஆடைகளுக்குள் மறைத்து வைப்பதும், வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் போது கட்டுகளில் ரூபாய் தாள்களை கூடுதலாக வைத்து எடுத்துச் செல்வதும் கண்டறியப்பட்டது. மேலும், பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய கம்மல், மூக்குத்தி, கொலுசு வளையல் போன்ற தங்கம், வெள்ளி நகைகளையும் திருடியது தெரியவந்தது.

 

 

இது தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு தனது 20 பக்க இடைக்​கால அறிக்​கையை அரசிடம் சமர்ப்​பித்​தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பணத்தை எண்ணும் குழுவின் பொறுப்பாளர் சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, மேற்பார்வை பொறுப்பாளர் ராம் சங்கர் உள்ளிட்ட 8 பேரை உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

இதனிடையே, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேஷத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon