சிவப்பு துண்டை சிறுமைப்படுத்தினால் இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது” – அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை
முரசொலியில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் பெ. சண்முகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது அநாகரிகத்தின் உச்சம் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக சார்பில் அந்த பதிவை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.
மேலும், சிவப்பு துண்டையும், இடதுசாரி இயக்கங்களின் அடையாளங்களையும் சிறுமைப்படுத்தும் வகையிலான செயல்கள் தொடர்ந்தால் அதற்கு கடுமையான அரசியல் பதில் கிடைக்கும் என்றும் எச்சரித்தார். “சிவப்பு துண்டை இதுபோல் சிறுமைப்படுத்தினால், இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.





